திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

சீனாவில் குண்டு வெடிப்பு. 22பேர் பலி  
வியாழன் 29 நவம்பர் 2018 12:51:24

img

பெய்ஜிங், 

சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு சீனாவின் ஹிபேய் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லோரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த குண்டுவெடிப்பில் 38 லோரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img