சனி 15, டிசம்பர் 2018  
img
img

திமுக கூட்டணியில் நான் இருக்கிறேன்: வைகோ பேட்டி
திங்கள் 26 நவம்பர் 2018 17:44:52

img

திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், ''திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக இல்லையா? என்ற கேள்விக்கு, இப்போது இல்லை, இன்னும் கூட்டணி அமைக்கவில்லை. அவர்கள் நண்பர்கள், எங்க கருத்தோடு ஒத்த கருத்தாக இருக்கிறார்கள். யார் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற ஸ்டேஜ்க்கு நாங்கள் இன்னும் வரவில்லை'' என்றார்.  

இந்த நிலையில் புதுக்கோட்டையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று துரைமுருகன் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, திமுக தலைவர் கருத்து என்னவென்று அவர் சொல்லட்டும். அவ்வளவுதான். திமுக தலைவர்தான் இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் வைகோ. 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த வைகோ, துரைமுருகன் மட்டும் திமுக இல்லை. அவர் திமுக பொருளாளர். என்னு டைய கல்லூரி நண்பர். எந்த அடிப்படையில் சொன்னார் என்று தெரியவில்லை. நாங்கள் ஆளுநர் மாளிகை முற்றகைப் போராட்டம் என்று அறிவித்தி ருக்கிறோம். அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினோம். அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கூட்டணியில் எந்த நெருடலும் வராது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் நான் இருக்கிறேன். இவ்வாறு கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நடு வானில் பாலியல் தொந்தரவு; தமிழக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மேலும்
img
தினகரன் கூடாரம் காலியாகும்... ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி வாக்குறுதி!!!

இரண்டு எம்எல்ஏக்கள் வருவது உறுதி

மேலும்
img
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தேர்வு; காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி இதற்கான

மேலும்
img
செந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவால்தான் நாட்டிற்கு அடையாளம்

மேலும்
img
ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

'ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img