வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

ஸ்ரீலங்காவில் மோதல் வெடிக்கலாம் என அச்சம் !
திங்கள் 26 நவம்பர் 2018 13:21:45

img

கொழும்பு, 

ஸ்ரீலங்காவில் அரசியல் குழப்ப நிலை தொடர்வதுடன் இந்த நிலை நீடித்தால் நாட்டில் மோதல்கள் வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ரணில், மைத்திரி, மகிந்த அணிகள் நாட்டில் பல பகுதிகளில்தொடர்ந்து வரும் நாட்களில் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.இந்தநிலையில், நாடெங்கும் உள்ள போலீசாரை முழுமையானவிழிப்பு நிலையில் இருக்குமாறு ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

சகல போலீஸ் நிலையங்களிலும், அப்பகுதியில் ஏற்படக்கூடியஎந்தவொரு அவசர சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில், நோயாளர்காவு வண்டிகள், தீயணைப்பு வாகனங்களுடன், அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக, போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டதன் பிற்பாடு நாட்டில் அரசியல் குழப்பம் நிலவிவருகின்றது. இதனைதொடர்ந்து, அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும்அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சரவைக்கு எதிராகவும் நாடாளுமன்றத்துக்குள்ளும் உச்ச நீதிமன்றத்திலும் நடவடிக்கைககள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், பதவி நீக்கப்பட்ட அரசாங்கத் தரப்புக்கும்,புதிய அரசாங்கத் தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என்பதாலேயே போலீசார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கோரி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியமான நகரங்களில்பேரணிகள், கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதுடன் நேற்றைய தினம்கண்டியில் ஒரு பாரிய கூட்டத்தை நடத்தியதுடன், தொடர்ந்தும் பல நகரங்களில் இத்தகைய பேரணிகளை நடத்த வுள்ளது. மேலும், கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கும், கண்டிக்கும்பாரிய வாகனப் பேரணிகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மகிந்த தரப்பும், அடுத்தவாரம், பல்வேறுஇடங்களில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.  அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளநிலையில், போட்டி போட்டுக்கொண்டு கூட்டங்களை நடத்தும் போது, இருதரப்புக ளும் மோதிக் கொள்ளலாம் என்பதால் போலீசார் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
விக்கியின் நிராகரிப்பு - கம்மன்பில அதிர்ச்சி 

கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது

மேலும்
img
கொழும்பில் போட்டியிடுவது பற்றி  இன்னும் முடிவாகவில்லை

இந்தக் கோரிக்கையை கவனத்தில்

மேலும்
img
இலங்கை கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள் 

இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள்

மேலும்
img
வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பேன்

மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு

மேலும்
img
வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்  இலங்கையில் போர்க்குற்ற விசாரணை 

இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img