வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

‘ரா’ நல்லதோர் அமைப்பு சரத்பொன்சேகா 
வியாழன் 22 நவம்பர் 2018 13:26:42

img

கொழும்பு,

இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’  அயல்நாட்டு அரசியல் தலைவர்களை கொல்ல வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள சில புலனாய்வு அமைப்புகள் போலன்றி ‘ரா’ அமைப்பானது ஒழுக்க முள்ள அமைப்பு என்றும் சரத்பொன்சேகா கூறியிருப்பது இலங்கை புலனாய்வு அமைப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்தியாவின் உயர் தொழில்சார் வேலைத் திட்டத்தை கொண்ட ‘ரா’ அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா கூறி யுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய இந்திய ‘ரா’ அமைப்பு திட்டமிட்டிருப்பதாக அதிபர் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த விசயம் குறித்து கருத்து தெரிவித்த போது அமைச்சர் சரத்பொன்சேகா இதனை கூறினார்.அதேவேளை அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுவது இயல்பு என்று பொன்சேகா தெரிவித்துள்ளார். 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
விக்கியின் நிராகரிப்பு - கம்மன்பில அதிர்ச்சி 

கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது

மேலும்
img
கொழும்பில் போட்டியிடுவது பற்றி  இன்னும் முடிவாகவில்லை

இந்தக் கோரிக்கையை கவனத்தில்

மேலும்
img
இலங்கை கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள் 

இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள்

மேலும்
img
வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பேன்

மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு

மேலும்
img
வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்  இலங்கையில் போர்க்குற்ற விசாரணை 

இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img