செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

ரணிலை பிரதமராக்குவதற்கு மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை 
திங்கள் 19 நவம்பர் 2018 13:33:29

img

கொழும்பு, 

பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் சத்திய வாக்குகளை வழங்குமாறு அதிபர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இல்லையெனில் ஐக்கிய தேசிய கட்சியில் வேறு ஒருவரின் பெயரை முன்மொழி யுமாறும் அதிபர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு ரணில் - மகிந்த இரண்டு பேரும் உரிமை கோரி வருகின்றனர். இதனையடுத்து இரண்டு தரப்பினரையும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரப்பட்டது. 

தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அதேநேரம் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு அதற்கு ஆதரவாக 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இந்நிலையில், ரணிலை மீண்டும் பிதமராக்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை ஒருபோதும் பிரதமர் பதவிக்கு நியமிக்க போவதில்லை என அதிபர் கூறியிருந்தார். 

இந்த பின்னணியில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் சத்திய வாக்குகளை வழங்குமாறு அதிபர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த உறுதியான தகவல் எதுவும்  வெளியாகவில்லை. 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு 

இவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்

மேலும்
img
சவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் 

களுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி

மேலும்
img
நாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம் 

மகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img