செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
சனி 17 நவம்பர் 2018 18:23:05

img

சென்னை, நவ. 18-

கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் என மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கஜா புயல் தாக்குதலால் நாகப்பட்டினம் மாவட்டம் முற்றிலும்  நிலைகுலைந்து விட்டது. மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டும், மின்கம்பங்கள் முறிந்து போனதால் மின்சார  விநியோகமும் பாதிக்கப்பட்டு, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியும் கிடக்கின்றன. பேரிடர்  மேலாண்மைக் குழுவினர் இரவுப் பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துக்களை முடிந்தமட்டும் தடுத்து இருக்கின்றனர்.

தமிழக அரசின் பாராட்டத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருந்தாலும்,  கஜா புயலால் 51 பேர் உயிர்ப்பலி ஆனது வேதனை அளிக்கின்றது. கஜா புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை இராமநாதபுரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு இயந்திரத்தை  முடுக்கி விட்டு பாதிப்புகளைக் கணக்கெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிசைகளை இழந்தோர் மற்றும் வீடுகள்  சேதமடைந்தோர் பற்றிய விவரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img