செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,
செவ்வாய் 13 நவம்பர் 2018 16:38:18

img

சென்னை

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்த ரஜினியிடம், 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டார். எந்த 7 பேர் என்று அவர் கேட்டதால் விமர்சனங்கள் எழுந்தன.  நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.

இதனால் நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக இணையத்தில் மக்கள் களமாடி வருகிறார்கள்.நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பேரறி வாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.  ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன்.  எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். 

இன்னொரு கேள்விக்கு, பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே என்றும், பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img