சனி 15, டிசம்பர் 2018  
img
img

நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு
திங்கள் 12 நவம்பர் 2018 15:57:28

img

திருவாரூரில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக பெறக்கூடிய வெற்றி தமிழக அரசியலில்  மிகப்பெரிய திருப்பத்தை உண்டாக்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சரான காமராஜ்  பேசியது பலரையும் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமையேற்ற அமைச்சர் காமராஜர், தொண்டர்கள் மத்தியில் பேசினார்,’’ அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய இயக்கம். பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிகண்டு பீடுநடைபோட்டு சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு வந்த சோதனைகள், இந்திய துணைக்கண்டத்தில் எந்தக் கட்சிக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. அதேபோல், வெற்றி என்கிற ரீதியில் தமிழகத்தில் அதிக முறை ஆட்சிக்கு வந்த கட்சியும் அதிமுக மட்டுமே. இதுதொண்டர்களால் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என சில துரோகிகளும், எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என சில விரோதிகளும் நினைக்கின்றனர். துரோகமும், விரோதமும் என்றைக்கும் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு நடைபெறக்கூடிய ஆட்சி, ஜெயலலிதாவின் திட்டங்களையெல்லாம் அப்படியே செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே இல்லை என்பதுதான் உண்மை. விலையில்லா அரிசி தந்து பசியைப் போக்கி இருக்கிறோம். கணினி, மிதி வண்டி உள்ளிட்ட பொருள்கள் தந்து தமிழகத்தில் கல்வியை வளர்த்துள்ளோம். திருமண உதவித் திட்டத்துக்கு 8 கிராம் தாலி, ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை என பல திட்டங்களை இன்றைக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால், கிராமப்புற வளர்ச்சி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி உயர்ந்திருக்கிறது. கல்வித்தரம் கூடியிருக்கிறது. இந்த திட்டங்களையெல்லாம் எடுத்துக்கூறி நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.

இன்றைக்கு மக்களுக்கான விலையில்லா திட்டங்கள் எல்லாம் கூடாது என்றும் அதை கொச்சை படுத்தியும் சிலர் கூறுகின்றனர். பணத்துக்காக நடிப்பவர்களும், பணம் சம்பாதிக்க தொழில்நடத்துபவர்களும் இந்த விலையில்லாதிட்டங்கள்  பற்றி பேச தகுதி கிடையாது. மக்கள்தான் இதற்கான முடிவை எடுக்கவேண்டும். நாங்கள் தன்னிறைவு பெற்றுவிட்டோம்; விலையில்லா திட்டங்களையெல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் என்றைக்கு சொல்கிறார்களோ அதுவரை இந்த திட்டங்கள் தொடரும்.

நடைபெறக்கூடிய 20 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வெற்றியின் முகவரியாக, திருவாரூர் வெற்றியை அமைத்துக் காட்டுவோம். அரசியலைப் பொறுத்தவரை நம்முடைய வாழ்நாள் எதிரி திமுக. எனவே, திமுகவை தோற்கடிக்க வேண்டியது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை. திரு வாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெறக்கூடிய வெற்றி, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவும் இது அமையும்’’ என்று பேசி முடித்தார் அமைச்சர் காமராஜ்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நடு வானில் பாலியல் தொந்தரவு; தமிழக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மேலும்
img
தினகரன் கூடாரம் காலியாகும்... ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி வாக்குறுதி!!!

இரண்டு எம்எல்ஏக்கள் வருவது உறுதி

மேலும்
img
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தேர்வு; காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி இதற்கான

மேலும்
img
செந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவால்தான் நாட்டிற்கு அடையாளம்

மேலும்
img
ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

'ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img