ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் ஓசோன் படலம் சீரடைந்து வருகிறது- ஐ.நா.சபை தகவல் 
வியாழன் 08 நவம்பர் 2018 18:32:27

img

ஜெனீவா,

சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக் கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது. 

மேலும் பருவநிலை மாற்றத்துடன் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே கடந்த 1986ஆம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிக்கப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் பொதுமக்களும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பழுதடைந்த ஓட்டை விழுந்த நிலையில் இருக்கும் ஓசோன் படலம் விரைவில் சீரடையும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. 

ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.  அதில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060ஆம் ஆண்டில் கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்கள் குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img