செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

‘ ஜெ., இருக்கும்போது படம் எடுத்திருந்தால் அவர்கள் வீரர்கள்’ - அதிர்ந்த தினகரன்
வியாழன் 08 நவம்பர் 2018 18:25:25

img

`சர்கார்' படம் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்டிருந்தால் அவர்களை வீரர்கள் என ஏற்றுக்கொள்ளலாம் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

தீபாவளி அன்று வெளியான `சர்கார்' படத்துக்கு தொடர்ந்து பல எதிர்ப்புகளும் புகார்களும் வந்த வண்ண உள்ளன. இந்தப் படத்துக்கும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸுக்கும் அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இன்று சென்னை அடையாறில் செய்தி யாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகர பேசும்போது, “ சர்கார் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். மக்க ளுக்கு நல்ல கருத்தைச் சொல்ல எடுக்கப்பட்ட ஆவணப் படம் இல்லை. இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்து ள்ளனர். இதுவே ஜெயலலிதா இருக்கும்போது இந்தப் படத்தை இயக்கி, நடித்திருந்தால் அவர்களைப் பெரிய வீரர்களாக ஏற்றுக்கொள்ளலாம். இது போன்றவர்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு அந்தப் படத்துக்கு மேலும் விளம்பரம் சேர்ப்பதாகவே தோன்றுகிறது. அந்தப் படம் இது முன்னர் ஓடிய பிற படங்களைப் போலத்தான் ஓடும். அதைப் பற்றியே தொடர்ந்து பேசி படம் பார்க்காத மக்களையும் பார்க்கத் தூண்டுவதாகவே தோன்றுகிறது. 

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து வருகிறது. பண மதிப்பு நடவடிக்கை பணக்காரர்கள் முதல் ஏழை வரை அனைவருக்கும் பாதிப்பைத் தந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை நலிவடைந்துள்ள நிலையில் மற்றுமொரு அணுகுண்டு போல் இந்த பண மதிப்பிழப்பு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கித் தள்ளுவதாகவே இது உள்ளது. இது வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. இந்த நடவடிக்கை தவறானது. மக்களுக்கு பெரும் பாதிப்பு. எனவே, இன்று கறுப்பு தினம்தான்” என விமர்சித்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img