ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

மதுரை தியேட்டர் முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம்! `சர்கார்' பிற்பகல் காட்சி ரத்து
வியாழன் 08 நவம்பர் 2018 18:22:55

img

``சர்கார் படத்தில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம்'' என எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பிற்பகல் 2.30 மணி காட்சியை ரத்து செய்துள்ள தியேட்டர் நிர்வாகம், மாலை 4.30 மணிக்கு படம் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளது.

 
 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான `சர்கார்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு கதை கரு தொடர்பாக பல சர்ச்சையைச் சந்தித்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தீபாவளி அன்று பல்வேறு திரையரங்குகளில் `சர்கார்' வெளியானது. இந்த நிலையில், படத்தில் வரும் காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க-வினர் மதுரையில் அமைந்துள்ள சினிப்பிரியா திரையரங்கை முற்றுகையிட்டனர்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, "சர்கார் திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக இருக்கி றது. அ.தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி அவரின் பெயருக்கு பங்கம்விளைக்கும் விதமாகவும் காட்சியமைத்துள்ளனர். எனவே, இது போன்ற காட்சிகளை அமைத்து, மக்களிடத்தில் அ.தி.மு.க அரசு மீது அவதூறுகளை பரப்பும் விதமான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம். இதுகுறித்து மதுரையில் உள்ள திரையரங்கங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என தெரிவித்தார்.

இதனிடையே, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா ஆகிய திரையரங்கில் இன்று 2.30 மணிக்கு தொடங்க இருந்த பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு ள்ளது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் சர்கார் திரையிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
img
ரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மேலும்
img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img