வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

சென்னை தியேட்டரில் `சர்கார்' பேனர்களைக் கிழித்தெறிந்த அ.தி.மு.க-வினர்!
வியாழன் 08 நவம்பர் 2018 18:20:01

img

சென்னை காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு பேனர்களை கிளித்தனர்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவாளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தால் தொடர்ந்து பல பிரச்னைகள் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி, ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். அரசு வழங்கும் இலவசப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அ.தி.மு.க-வினர் சர்காருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை காசி தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் குவியத்தொடங்கினர். உடனடியாக அங்கு வந்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க-வினர் பேனர்களை கிழிக்கும் முன்பு தாங்களாகவே அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸாரும் தியேட்டர் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சர்கார் காட்சிகள் ரத்து போன்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

இதையடுத்து, சர்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அ.தி.மு.க-வினரே சர்கார் பட பேனர்களைக் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நில வியது. இருதரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள சர்கார் பட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img