புதன் 27, மார்ச் 2019  
img
img

பில்லா பாண்டி விமர்சனம்
வியாழன் 08 நவம்பர் 2018 17:58:07

img
தங்கமுகையதீன்
 
வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்துவந்த ஆர்.கே. சுரேஷ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகனுக்குறிய அனைத்து அம்சங்க ளையும் இதுவரை மறைத்து வைத்துக் கொண்டு, வில்லனாக நடித்தது எப்படி என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஆர்கே சுரேஷ், இப்படத்தில் தனது வெள்ளை மனதை வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம் போல் பாய்தோட செய்திருக்கிறார். அவரது நிஜவாழ்க்கையில் அவரின் வெட்டருவா மீசைக்குள் விழிநீர் தேங்கி கிடக்கிறது. அது மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்க தனது புன்சிரிப்பால் மறைத்தக் கொள்கிறார் என்பதை அவரின் உற வினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டும்தான் தெரியும். சரி இனி கதைக்கு வருவோம்.                                                    
 
மதுரையில் பில்லா பாண்டி (ஆர்.கே.சுரேஷ்) கட்டிடத் தொழிலாளி. இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். அதனால் பில்லா படம் திரைக்கு வந்ததுமுதல் தனது பாண்டி என்ற பெயரை பில்லா பாண்டி என்று (கடப்பிதழ் உள்பட) மாற்றி வைத்துக் கொள்கிறார். கட்டிட மேஸ்திரி தொழில் வரும் வருமானத்தை எல்லாம் அஜீத் ரசிகர் மன்றம் மூலமாக ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். தன்னுடைய முறைப் பெண்ணான சாந்தினியும் ஆர்.கே.சுரேஷும் காதலிக்கிறார்கள். பில்லா பாண்டி வசிக்கும் ஊரில் சங்கிலி முருகனும் வசிக்கிறார். சங்கிலி முருகனின் மகள் சென்னையில் வசிக்கிறார். தனது சொந்த கிராமத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை தனது தந்தை சங்கிலி முருகனிடம் தெரிவிக்கிறார். அதனால் பில்லா பாண்டியிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்கிறார் சங்கிலி முருகன்.       
                                                             
வீட்டுக்கு நிலை வைக்கும்போது சென்னையிலிருந்து சங்கிலி முருகனின் பேத்தி இந்துஜா வருகிறார். பில்லா பாண்டியின் நற்குணங்களை நேரில் பார்த்த இந்துஜாவுக்கு, பில்லா பாண்டியின் மீது ஒருதலைக் காதல் ஏற்படுகிறது. வீடு கட்டி முடிந்தவுடன் கிரகப்பிரவேசத்திற்கு வரும் இந்துஜாவின் பெற்றோர்கள், தனது மகளுக்கு தனது நண்பனின் மகனை திருமணத்திற்கு நிச்சயக்கிறார். ஆனால் இந்துஜா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் பில்லா பாண்டியை காதலிக்கிறேன் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். அப்போதுதான் இந்துஜா தன்னை காதலிக்கும் விஷயமும் பில்லா பாண்டிக்கு தெரிய வருகிறது. இதை அறியாத இந்துஷாவின் தந்தை, பில்லா பாண்டியை அடித்து கிரகப்பிரவேச வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். உடனே தனது மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு காரில் சென்னைக்கு புறப்படுகிறார். போகின்ற வழியில் ஏற்படும் கார் விபத்தில் இந்துஜாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள். இந்துஜாவுக்கு தலையில் பலமான அடிபட்டதால் கடந்த கால நினைவுகளை இழக்கிறார். 7 வயது வரை உள்ள நினைவுகள் மட்டுமே அவருக்கு நினைவிருக்கிறது. 
 
பேத்தியின் வைத்திய செலவுக்காக புதியதாக கட்டிய வீட்டையும் விற்றுவிடுகிறார் சங்கிலி முருகன். நோய் குணமாகது என்று டாக்டர்கள் தெரி வித்ததால் கவலையிலேயே இறந்தும் விடுகிறார். இதை கேள்விப்பட்ட பில்லா பாண்டி தன்னை காதலித்த இந்துஜா இப்போது 7 வயது குழந்தை தனத்தோடு தன்னந்தனியாக இருப்பதை அறிந்து அவளை தனது வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வருகிறார். இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்துஜாவின் வைத்திய செலவுக்காக தனது வீட்டையும் வீற்றுவிடுகிறார் பில்லா பாண்டி. அதனால் ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டி அதில் இந்து ஜாவை குழந்தையை பராமரிப்பதுபோல் பராமரித்துவருகிறார். காமவெறியர்களிடமிருந்து புத்தி சுவாதீனம் இல்லாத இந்துஜாவை எப்படி காப்பாற்று கிறார். தான் காதலித்த சாந்தினி என்ன ஆனாள், இந்துஜாவுக்கு சுயநினைவு வந்ததா என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது.
 
ஆர்.கே. சுரேஷ் வில்லனுக்கு பொருத்தமானவர் என்றால் அதைவிட கதாநாயகனுக்கும் பொருத்தமானவர் என்பதை பில்லா பாண்டி படம் நிரூபிக்கிறது. அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதியும், அடிதடிக்கு இறங்க வேண்டிய இடத்தில் அபாரமாகவும் நடித்திருக்கிறார். 
 
அழகான கதையை தேர்ந்தெடுத்து கலகலப்பாகவும் கண் கலங்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ் சேதுபதி.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img