ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு
சனி 13 அக்டோபர் 2018 14:02:44

img

பாரிஸ், அக்.13-

ஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரிஸில் நடந்தேறியது. பாரிஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார். 

விலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு ஆதரவாக ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒரு மில்லியன் கையெழுத்துகளை பெறும் நோக்கில் பிரபல விலங்குகள் நல அமைப்பு ஒன்று நடத்தும் போராட்டங்களுக்கு பமீலா ஆதரவு அளித்துள்ளார். 

மனிதர்களை மகிழ்விப்பதற்காகவோ  நமக்கு உணவையோ உடையையோ தருவதற்காகவோ எந்த ஒரு விலங்கும் கூண்டில் அடைக்கப்படக்கூடாது என தான் எண்ணுவதாக பமீலா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் இந்த பிரச்சாரத்தை முன்வைக்கும் கூட்டத்தார் ஒரு மில்லியன் கையெழுத்துகளைப் பெற்று விட்டால் அது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img