செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

ஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல் 
சனி 13 அக்டோபர் 2018 13:55:24

img

டோடோமா, 

தான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவைச் சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு சுமார் வெ. 6,000 கோடி ஆகும்.

விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்பிரிக்கா முழு மைக்கும் இவர் நடத்தி வருகிறார்.  போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17ஆம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்பிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. 

இந்நிலையில் முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும் முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்த ல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தார் இ ஸலாம் ஆளுநர் கூறுகையில்,  சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர். அவர்கள் வெள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.  

இது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜியை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்

தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img