செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

அமெரிக்கா உதவியின்றி சவூதி தாக்குப் பிடிக்க முடியாது
சனி 06 அக்டோபர் 2018 11:48:52

img

துபாய், 

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவூதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீ பத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது. 

மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும்  அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து ள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவூதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஓபேக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவூதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை. 

இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பியில் சவுத் அவ்ன் நகரில் நடந்த விழாவில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவூதி அரேபியா குறித்து குறிப்பி டும்போது கடுமையாக தாக்கினார். 

மக்களின் கரகோஷத்துக்கு இடையே பேசிய அவர், பணக்கார நாடாக இருந்தாலும் சவூதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img