புதன் 21, நவம்பர் 2018  
img
img

பிரனயை கொலை செய்ய காரணம் அந்த வீடியோதான் -தெலுங்கானா ஆணவக்கொலை விவகாரம்
வியாழன் 20 செப்டம்பர் 2018 13:48:59

img

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த பிரனய்- அம்ருதா என்ற இருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், அம்ருதாவின் தந்தை கூலிப்படையை ஏவி பிரனயை ஆணவக்கொலை செய்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பிரனயை கொலை செய்ய அம்ருதாவின் தந்தை பிஹாரை சேர்ந்த கூலிபடைக்கு 2 கோடி வரை கொடுத்து கொலை செய்ய சொல்லி யிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் சம்மந்தப்பட்டதாக அம்ருதாவின் தந்தை உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் அம்ருதாவின் தந்தை பிரனயை கொல்ல காரணமாக இருந்தது ஒரு வீடியோதான் என்று தெரிவித்துள்ளாராம். 

பிரனய்-அம்ருதா திருமணம் செய்துகொண்டபோது, அதை திரைப்படம் அளவிற்கு வீடியோவாக எடுத்துள்ளனர். இதை அம்ருதா, சமூக வலைதளத்தில் பதி விட, அது சரசரவென வைரலாகி அம்ருதாவின் தந்தைக்கு நெறுங்கியவர்களின் மூலம் அம்ருதாவின் தந்தை காதுக்கு வந்துள்ளது. அவர்கள் மேலும், அதை அவரிடம் சொல்லி சொல்லி இவர்கள் இருவரின் மீது வெறுப்படைய செய்துள்ளனர். அப்போதுதான், அம்ருதாவின் தந்தை, ”பிரனயை கொலை செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாலும் இப்படித்தானே  பரவும்” என்று கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img