செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்கர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
திங்கள் 17 செப்டம்பர் 2018 14:34:03

img

கேரளாவில் பெய்த கன மழையால் பல மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அது போல் பம்பை மற்றும் சபரிமலை சன்னிதானமும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கேரளா  அரசும் தேவஸ்தானமும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் புரட்டாசி மாதம் எப்பொழுதும் சன்னிதானம் திறந்து இருக்கும். அதற்காக ஐய்யப்ப பக்தர்களும் மாலை போட்டு ஐய்யப்பனை தரிசிக்க வருவது வழக்கம்  அதுபோல்  இந்த புராட்டாசிக்கு ஐய்யப்ப பக்தர்கள் வர இருப்பதால் சன்னிதானத்தில் உள்ள தேவஸ்தானத்திலிருந்து ஐய்யப்ப பக்த ர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.அதை பக்தர்கள் கடை பிடித்து கொண்டு ஐய்யப்பனை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.  

அதாவது ஐய்யப்பனை தரிக்க வரும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் வந்தால் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.அதுபோல் நிலக்கல்-பம்பா கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும்.  நிலக்கல்லிலேயே பம்பா வரை போய் வர கூப்பன்கள் வாங்க வேண்டும்‌.பேருந்தில் நடத்துநர் கிடையாது.  அதன் பின் பம்பை வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும். 

அங்கிருந்து ஆஸ்பத்திரி வழியாக கணபதி கோவில் வந்தடைய வேண்டும்.   பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால்   த்ரி வேணிமுதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது மற்றும் மண் ஈரமாக உள்ளதால் பதக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடாது.    

பம்பையில் ஒரு பக்கம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். வேறு எங்கும் ஆற்றில் இறங்கக் கூடாது. பக்தர்கள் அங்கிருக்கும் செக்யுரிட்டிகள்  கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.  பம்பா போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. ‌அங்கு யாரும் செல்லக்கூடாது .    

பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளது.  யாரும் இவ்விடங்களுக்குச் செல்லக்கூடாது.     நிறைய பாம்புகள் உள்ளன.  முக்கியமாக காட்டுப்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லை என்றால்  பாம்புகள் மூலம் பக்தர்கள்  உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும்.

தடை விதிக்கப்பட்டுள்ள   பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது.   குடி நீர் எடுத்துச் செல்லவும்.ப்ளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும். பம்பையில் ப்ளாஸ்டிக் தடைசெய்யப் பட்டுள்ளது.   இருமுடியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.சாப்பாடு மற்றும் உணவு வகைகள் நிலக்கல்லில் கிடை க்கும்.  தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் எடுத்துச் செல்லலாம்.        

வெள்ளத்தினால் நீரின் ஆதாரங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் பற்றாக்குறை உள்ளது. பக்தர்கள் குறைந்த அளவு நீர் உபயோகப் படுத்த வேண்டும். வீணாக்கக் கூடாது.   நிலக்கல்லில் பயோ டாய்லெட்டில் உள்ளன.   பழைய டாய்லெட்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உபயோகிக்க முடியாது. நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவு. இதை எல்லாம் பக்தர்கள் கடைபிடித்து  வந்து  ஐய்யப்பனை தரிசித்து விட்டு பக்தர்கள் செல்ல வேண்டும்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img