வியாழன் 27, ஜூன் 2019  
img
img

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!
வெள்ளி 14 செப்டம்பர் 2018 15:31:38

img

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் மறைவை தொடர்ந்து, கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சித் தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இதேபோல் முதன்மைச் செயலாளரான துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கட்சியில் செயல்தலைவர் பதவி ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதன்மைச் செயலாளர் பதவி யாருக்கு? என்கிற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இன்று கட்சியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சட்ட விதி 17, பிரிவு 3-ன் படி திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
img
நாடாளுமன்றத்தில் தூங்கிய அமித்ஷா! வைரலாகும் போட்டோ!

கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது

மேலும்
img
ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து

மேலும்
img
இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'

பாமக பெரும் பின்னடைவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img