வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்
புதன் 05 செப்டம்பர் 2018 17:28:38

img

(ஹேமா எம்.எஸ்.மணியம்) கூலிம், 

கெடா லூனாஸ் வெல்லெஸ்லி தோட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி கனடாவில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் 3 சிறப்பு விருதுகளைப் பெற்றிருப்பதாக வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சு.இராமலிங்கம் தெரிவித்தார்.

கடந்த வாரம் 28.8.2018 ஆம் தேதி கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன் லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து 4 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கனடா புத்தாக்க அறிவியல் போட்டிக்குச் சென்றனர். அம்மாணவர்கள் ச.மோனிஸ், மு.முகிலன், க.நிஷா ஸ்ரீ மற்றும் ச.ஸ்ரீஷிவாணி ஆவர்.

மேலும், இவர்களுடன் ஆசிரியர்கள் ஞானஜோதி, சு.விஜயா ஆகியோரும் உடன் சென்றனர். டொரான்டோ அனைத்துலக புத்தாக்க அறிவியல்  போட்டியில் செம்பு, பித்தளை பொருட்களை வெண்மையாக்கும் திரவியக் கண்டுபிடிப்பு இப்புத்தாக்க போட்டியில் சோதனைக்கு வைக்கப்பட்டது.

மேலும், புதிய கண்டுபிடிப்புக்காக லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 1 தங்க விருதும் 3 சிறப்பு விருதுகளும் கனடா புத்தாக்க அறிவியல் போட்டியில் வழங்கப்பட்டது. அதில் 2 சிறப்பு விருதுகள் கண்டுபிடிப்புக்காகவும் மற்றொரு விருது போலந்து வழங்கியதாகவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

மலேசியாவில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளிலே இப்பள்ளியே 19 மணி நேரம் செலவு செய்து டொரான்டோ அனைத்துலக புத்தாக்க அறிவியல் போட்டி யில் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

தொடர்ந்து, இவர்கள் கனடாவில் அனைத்துலக போட்டியில் கலந்துகொள்வதற்கான 55 ஆயிரம் வெள்ளி செலவுகளை வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்ப ள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, பெற்றோர்கள் ஆகிய அனைவரும் இந்நிதியைத் திரட்டி மாணவர்களை கனடாவிற்கு அனுப்பியதாக தெரி விக்கப்பட்டது. 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
img
ரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை

ரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img