புதன் 21, நவம்பர் 2018  
img
img

தேடித்தேடி கிழிக்கப்படும் அழகிரி போஸ்டர்
செவ்வாய் 04 செப்டம்பர் 2018 16:07:59

img

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரால் நீக்கப்பட்டார். கலை ஞர் மறைவுக்கு பின் தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென தனது சகோதரரும், திமுக தலைவருமான ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஸ்டாலின் தரப்பில் அழகிரியின் கோரிக்கை கண்டுக்கொள்ளாத நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவில் பல்வேறு காரணங்களால் ஓரம்கட்டப்பட்டவர்களை அழகிரி அணி திரட்டுகிறார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு சேர்ந்த சரவணன் என்பவரை அமைப்பாளராக அழகிரி நியமித்துள்ளார். அவர் செப்டம்பர் 3ந்தேதி இரவு அழகிரியை வாழ்த்தியும், ஊர்வலத்துக்கு வரவேண்டி திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருந்தார். 

இது ஸ்டாலின் கோட்டை இங்கு எப்படி போஸ்டர் ஒட்டலாம் என நகரம் முழுவதிலுமுள்ள போஸ்டர்களை திமுக ந.செ கார்த்திவேல்மாறன் தரப்பு தேடித்தேடி சென்று கிழித்துவருகிறது. இது அழகிரி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி அழகிரிக்கு தகவல் சொல்ல அவர் அவுங்களைப்பற்றிய தகவல்களை அனுப்புங்க என்று கூறினாராம். 

நாளை அழகிரி நடத்தும் ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இருந்து 10 வேன்களில் சென்னை செல்ல முடிவு செய்துள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img