img
img

கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய விஜய்!
திங்கள் 13 ஆகஸ்ட் 2018 12:21:42

img

திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்ப ட்டது. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

இந்நிலையில் திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார். கலைஞர் காலமான நேரத்தில் சர்கார் படபிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். எனவே கலைஞருக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில் இன்று அதி காலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய், நேரடியாக சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது நினைவிடம் அருகே மலர் வளையம் வைத்து மரியாதையும் செய்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img