செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

புதுச்சேரியில் திருமுருகன் காந்தி கைதை கண்டித்து போராட்டம்...
திங்கள் 13 ஆகஸ்ட் 2018 12:12:32

img

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நா.வில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும்படி லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி ராயபேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணி வித்தார் என போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிதாக 124a தேசதுரோக வழக்கினையும் 153 சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட புதிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், திருமுருகன் காந்தி கைதை கண்டித்து புதுச்சேரியில் காமராஜர் சிலை அருகே மறியல் போராட்டம் நடந்து வருகிறது. திராவிடர் விடு தலை கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நடத்தி வரும் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img