வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

நீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை
வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 14:16:58

img

தமிழைப் பிடித்துக்கொண்டு
பிழைத்தவர்கள் தாராளம்-நீ
தமிழை அழைத்துக் கொண்டு
துரத்தியவர்கள் ஏராளம்!

அறியாமைக்கு ஆலயம் உள்ள ஊர்களில்
அறிவுக்கு ஆலயம் எழுப்பினாய் !

தமிழகத்தை ஒளிரச்செய்ததில்
நீ மதிஆதவன் !
உன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கோ
நீ மதியாதவன் !

சிலேட்டு அரசியலாளர்களுக்கும்
உன் சிலேடை பிடிக்கும் !

முளைகட்டிய வாா்த்தைகள்
உன் பேச்சில் !
களைகட்டிய தமிழகம்
உன் ஆட்சியில் !

உனை வெறுப்பவர்களும்
உன் எதுகையில் விழுந்திருப்பர் !
உனை மறுப்பவர்களும்
உன் மோனையில் மகிழ்ந்திருப்பர்!

உரைநடையில் நீ வைத்தது
வார்த்தைகள் அல்ல
வாள்!
திரைநடையில் நீ சொன்னது
கலைகள் அல்ல
கலகம்!

உன்னைச் சேராத நதிகள் இல்லை!
ஆனாலும் உன்னில் கலங்கமில்லை!

நீ புரியாத போர்கள் இல்லை!
ஆனாலும் உன்னில் குறைகளில்லை!

கவனத்தைக் குவிக்க வைப்பதே
மஞ்சளின் தொண்டு!
கடமையைச் சொல்லிச் சென்றதே
உன் மஞ்சள் துண்டு!

தென்றலைத் தீண்டியிருக்கிறாய்
தீயைத் தாண்டியிருக்கிறாய்
எல்லார் மனங்களிலும் நின்றிருக்கிறாய்
சென்று வா தலைவா...
செயல் இருக்கிறார்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஈரோடு: பத்து கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கொடுமுடி அருகே உள்ள காசிபாளையம், ஓஞ்சலூர்

மேலும்
img
மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது: எடப்பாடி பெருமிதம்

இன்று காலை 7.30 மணியளவில் டெல்லி

மேலும்
img
சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்தில் ஒரு டாலர் ரூபாயின் மதிப்பு ரூ.70: திருமா

நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை

மேலும்
img
வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினிகாந்த்: கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு

மேலும்
img
அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினி? புகழேந்தி

எது எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img