வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

அமெரிக்காவை மொத்தமாக அழித்துவிடுவோம் -ஈரான் பகிரங்க மிரட்டல்!
வெள்ளி 27 ஜூலை 2018 16:58:00

img

ஈரானை அமெரிக்கா தக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தையும் அழித்து வீழ்த்திவிடுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விட்டு ள்ளது. ஈரான் உடன் செய்து கொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார நெருக்க டிகளை செலுத்திவருகிறது அமெரிக்கா. இதற்கு ஈரானும் அமெரிக்காவிற்கு பதிலடடி கொடுத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் ஈரானில் நேற்று நடந்த நாட்டின் வெளியுறவு அதிகாரிகள்  கூட்டத்தில்  அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை கடுமையாக எச்ச ரித்து பேசினார். இதனால் இரு நாடுகளுக்கான இடையேயான பதற்ற நிலை இன்னும் அதிகரித்தது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''இனி எந்த மிரட்டலையும் முன் வைக்கக்கூடாது அப்படி வைத்தால் நீங்கள் வரலாற்றில் இதுவரை சந்திக்க முடியாத பேரழிவை சந்திக்க நேரிடும். அதிக நாட்கள் உங்கள் மிரட்டல்களை அமெரிக்கா பொறுத்திருக்காது'' என குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில்  டிரம்பின் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரான் சிறப்புப்படை கமாண்டோ காசிம் சோலிமனி'' அமெரிக்கா  எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தயும் அழித்து விடுவோம்'' என  பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.  

அதேபோல் ''டாஸ்னிம்'' என்ற ஈரான் பத்திரிகை இந்த சம்பவத்தை குறிப்பிடுகையில் '' டிரம்ப் போரை துவக்கி வைத்தால் இஸ்லாமிய பேரரசு போரை முடித்துவைக்கும் என  கமாண்டோ காசிம் சோலிமனி சபதமேற்றுள்ளார்'' என செய்தி வெளியிட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img