செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

ராகுல் முதலில் திருமணம் செய்துகொள்ளட்டும் பிறகு எங்களை கட்டியணைக்கலாம்
வெள்ளி 27 ஜூலை 2018 16:28:19

img

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு பாஜக எம்.பிக்களை கட்டிபிடிக்கட்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் டெல்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய ராகுல்காந்தி, நான் கட்டிபிடிப்பேன் என நினைத்து என்னை பார்த்ததும் பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர். பிரதமர் மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் எதிர்க்கும் ஆனால் வெறுக்காது. வெறுப்புடன் இருக்கக்கூடாது என்று மதம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.என கூறினார்.

ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டியணைத்ததற்கும் தான் பாஜக எம்.பிக்களை கட்டி பிடித்து விடுவேன் என பயப்படுகிறார்கள் என்ற கருத்திற்கு பாஜக எம்.பிக்கள் பல எதிர் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு எங்களை கட்டிபிடிக்கலாம் என்றும், ராகுல்காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவரது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img