img
img

சராசரி மனிதர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டரை வழங்குவாரா நிர்மலா சீதாராமன்? குஷ்பு
வியாழன் 26 ஜூலை 2018 15:46:10

img

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ராகுலுடனான ஆலோசனையில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசினீர்களா? பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,  அது குறித்து பேசவில்லை என்று குஷ்பு சொன்னதும்,   ராகுல்காந்தியிடம் என்னதான் பேசுனீங்க? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த குஷ்பு,  ‘’தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்த அப்டேட்டுக்காகத்தான் ராகுல்காந்தியை சந்தித்தேன்’’என்றார். ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீத்தாரமன் சந்திக்க மறுத்தது குறித்து கேள்விக்கு,  ‘’துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்காதது பெருத்த அவமானம்.  

ஓபிஎஸ் சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு,   ‘’எமர்ஜென்சி என்பதால் கொடுத்ததாக சொல்கிறார்கள். துணை முதல்வரின் சகோதரர் என்பதால் வழங்கியிருக்கிறார். சராசரி மனிதர்களுக்கு இப்படி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராணுவ ஹெலிகாப்டரை வழங்குவாரா?’’என்று கேள்வி எழுப்பினார்.    

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img