செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மயக்க ஊசி செலுத்தி 12 வயது சிறுமியை சீரழித்த 17 பேர்! சென்னையில் அதிர்ச்சி!
செவ்வாய் 17 ஜூலை 2018 12:51:45

img

சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அயனாவரத்தில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் கடந்த 30 வரு டங்களாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் வசித்து வருகிறார்.   இவருக்கு இரண்டு மகள்கள்.  ஒரு மகள் வெளிமாநிலத்தில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது மகள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு 12 வயது. 

இந்த கு்டியிருப்பில் வசிக்கும் 8 லிப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் 6 காவலாளிகள், எலக்ட்ரீசியன்கள், தண்ணீர் கேன் விநியோகம் செய்பவர்கள் என்று மொத்தம் 17 பேரும் கத்திமுனையில் மிரட்டியும், போதை மருந்து செலுத்தியும் கடந்த 5 மாதங்களாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.  மிரட்டலுக்கு பயந்து இதை வெளியே சொல்லாமல் 5 மாதங்களாக அந்த சிறுமியும் மறைத்து வைத்துள்ளார்.  

இந்நிலையில், சிறுமியின் சகோதரி படிப்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது  தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லி அழுதிருக்கிறார்.  இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பரிசோதனை செய்துள்ளனர்.  பரிசோதனையில் சிறுமி சொன்னது உறுதியானது.  இதையடுத்து அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் 17 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் 17 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.  சிறுமியை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img