வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

இளவரசரரை கொல்ல முயன்றவர் கைது
சனி 14 ஜூலை 2018 16:08:31

img

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மகனான நான்கு வயது ஜார்ஜ்ஜை கடந்த மாதம் தென் மேற்கு லண்டனில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். இந்நிலையில், இளவரசர் ஜார்ஜ்ஜை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு செய்திகள் வந்தது. இதையடுத்து, சதி திட்டம் தீட்டிய உஸ்னைன் ரஷீத் என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இவர் இங்கிலாந்தின் லங்காஷைரில் உள்ள நெல்சன் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த அக்டோபர் மாதம் இளவரசர் ஜார்ஜை கொல்ல தன் குழுவினருடன் சாட்டிங் செய்துள்ளார். பின்னர், அதை கண்டுபிடித்த உளவுத்துறை. ஜார்ஜுக்கு பாதுகாப்பை கூட்டியது. 

இதனை தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிர வாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் விசாரணையில், அவர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரிட இருந்ததாக கூறப்படுகிறது.          

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img