திங்கள் 16, ஜூலை 2018  
img
img

என்னை கொல்ல பார்க்கிறது அரசாங்கம் - முகிலன் குற்றச்சாட்டு!
புதன் 11 ஜூலை 2018 13:18:55

img

சமூக செயற்பாட்டாளரும் இயற்கை வளங்களை பாதுகாக்க தொடர்ந்து போரடி வருபவருமான தோழர் முகிலன் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு 296 ஆட்களாக சிறையில் இருந்து வருகிறார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளைங்கோட்டை சிறைக்கு வந்தவர்களிடம் போராட்டங்கள் குறித்து வழக்குகள் குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி மீண்டும் போராட தூண்டி வருகிறார் என்று பாளைங்கோட்டை சிறையில் இருந்து ஜூலை 1ந் தேதி அதிகாலை நிர்வாக கார ணங்களுக்காக என்ற பெயரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மதுரை சிறையில் முகிலன் அடைக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு முன்பும் பின்பு மலக்குழிகள் உள்ளதாகவும் கொசுக்கள் அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3ந் தேதி தேதி கூடன்குளம் வழக்கு விசாரணைக்காக வள்ளியூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது வழக்கம் போல நீதிபதி பிணையில் போக விருப்பமா என்று கேட்ட போது சொந்தப் பிணையில் விடுவித்தால் செல்ல தயார் என்று முகிலன் சொன்ன தால் அடுத்த வாய்தா 10 ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முகிலன். என்னை கொல்ல அரசு திட்டமிட்டு உள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தார். 

லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் என்னை அடைத்திருக்கிறார்கள். அரவக்குறிச்சியில் தேச துரோக வழக்கு போட்டிருக்கிறார்கள். அடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ம் என்றால் சிறை.. ஏன்? என்றால் துப்பாக்கிச் சூடு. இந்த அவலத்தை முறி யடிப்போம். 1990களில் ஜெ. 18 லட்சம் பேர் மீது வழக்கு போட்டார். அடுத்து 1996 ல் தோற்றார். அடுத்து 2002ல் பொடா என்றார் 2004 ல் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணை கவ்வினார். 

இப்போது பசுமை வழிச்சாலை, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன், மணல் கொள்ளை, இயற்கை வளங்கள் திருட்டு என்று நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தையும் தமிழினத்தையும் கருவறுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். தங்களுக்கு வருமானம் வந்தால் போதும் என்று பார்க்கும் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

எங்களை விட்டுவிடுங்கள். ஆனால் 10 ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். அது அரசாங்கங்களின் காதுகளில் விழவில்லை. விரைவில் தமிழகம் மாற்றங்களை காணும். தமிழினத்தை கருவறுக்க முடியாது. ஆட்சியில் உள்ளவர்கள் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டார்.

மதுரை சிறையில் கொசுக்கடி, வளாக மாற்றம் பற்றி நீதிபதியிடம் கேட்டீர்களா என்ற கேள்விக்கு.. சுகாதாரமான இடத்திற்கு மாற்ற வேண்டும். மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மதுரை சிறை நிர்வாகத்திற்கு வள்ளியூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார். ஒவ்வொரு முறையும் முகிலனை நீதி மன்றத்திற்கு அழைத்து வரும் போது ஊடகங்களிடம் பேசிடாமல் வேகமாக தள்ளிக் கொண்டு செல்லும் போலீசார் நேற்று அவரை பேட்டி அளிக்க விட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்

நுகர்பொருள் வாணிப கழக மேலாளராக

மேலும்
img
தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்

மேலும்
img
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த பகுதியில் ஆவி நடமாட்டமா??!!

அமானுஸ்ய மாந்த்ரீக கொலை என ஒரு பேச்சு

மேலும்
img
கூட்டணிக்கு வியூகம் வகுத்த அமித்ஷா! - ஆன்மீக அரசியலில் ரஜினியின் அடுத்த மூவ்!

2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற

மேலும்
img
அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்: டி.டி.வி. தினகரன் பேட்டி

மிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img