வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
புதன் 04 ஜூலை 2018 17:45:40

img

காவலரை வெட்டிய ரவுடு ஆனந்தன் சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.  

சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரவே, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ராஜவேலு  அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ராஜவேலுவை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. ரவுடி ஆனந்தன் போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் சர மாரி யாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி ஆனந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரவுடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.   இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img