ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

எடுபிடி முதலமைச்சராக இருப்பதைவிட செயல்படாத தலைவராக இருக்கலாம்: மு.க.ஸ்டாலின் பளார்!
திங்கள் 02 ஜூலை 2018 15:30:16

img

எடுபிடி முதலமைச்சராக இருப்பதைவிட செயல்படாத தலைவராக இருக்கலாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். அப்போது, என்னுடைய தலைமையை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தட்டி பறித்துவிட்டார் என அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘இந்த குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப்பறிக்க முடியாது’ என்று கூறி உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் பேசிய அவர், ‘வெளிநாடு செல்லவிருந்ததால் உதயநிதிக்கு தலைமையேற்க வாய்ப்பு கொடுக்க ப்பட்டது என்றும், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டால் தனது தலைமையில் விழா நடைபெறுவதாக' விளக்கமளித்தார்.

முன்னதாக கிருஷ்ணகிரியில் நேற்று மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின்,

எடுபிடி முதலமைச்சராக இருப்பதைவிட செயல்படாத தலைவராக இருக்கலாம் என்றார். மேலும், சேலம் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நின்று பேட்டி கொடுக்கும் தெம்பு முதலமைச்சருக்கு இருக்கிறதா? 8 வழிச்சாலைக்கு மாற்று வழியை நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
img
நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு...

அண்ணே வணக்கம், என்ன நீ சீட்டு அவருக்குதான்

மேலும்
img
தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img