img
img

விருந்தில் விஷம் வைத்த பெண் கைது!!!
சனி 23 ஜூன் 2018 17:04:03

img

மஹாராஷ்ட்ரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே மகத் என்னும் கிராமம் இருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி சுபாஷ் மானே என்ப வரின் வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்று வலி எற்பட்டது. பெரியவர்களுக்கு வயிற்று உபாதைகள் எற்பட்டு வலியால் அவதிப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 120 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் காவலர்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பிரத்னியா என்ற 23 வயது பெண்ணை பிடித்து காவலர்கள் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சுபாஷ் மானேகாவின் நெருங்கிய உறவினரான அந்தப் பெண் குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே வின் குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார். பரிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தைக் கலந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதை யடுத்து பிரத்னியாவை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img