திங்கள் 16, ஜூலை 2018  
img
img

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்
சனி 23 ஜூன் 2018 16:54:16

img

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தற்போதைய நிலவரப்படி, உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் யார் என்று கேட்டால், நிச்சயம் தோனியைத்தான் பலரும் தேர்வு செய்வார்கள். ஸ்டம்புக்குப் பின்னால் இருந்தபடி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, ரன் அவுட் சமயங்களில் சமயோஜிதமாக செயல்படுவது, கீப்பிங் பேட்களைக் கால்களில் கட்டிக்கொண்டு அதிவேகமாக ஓடுவது என மிகச்சிறப்பாக ஆடிவருபவர் அவர். 

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு விருப்பமான விக்கெட் கீப்பராக தோனி இடம்பெறவில்லை. மாறாக அவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நீகிர்க்கை, லெக்சைட் திசையில் இருந்தபடி ஸ்டம்பிங் ஆக்கியதை அடுத்து அவரை கில்கிறிஸ்ட் பெருமிதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், சில தினங்களுக்கு முன்னர் சாரா டெய்லர்தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று நான் ட்வீட் இட்டி ருந்தேன். ஆணோ - பெண்ணோ என்னைப் பொருத்தவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் அவர்தான். உலகில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் பலர் இருந்தாலும் நான் இதைத் துணிச்சலாகவே சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் அலைஸா ஹீலி என்பவரும் மிகச்சிறந்தவர்தான் என தனது தேர்வு குறித்து விளக்கியுள்ளார். 

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்

மேலும்
img
சாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்

சிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்

மேலும்
img
காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா

பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்

மேலும்
img
காமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

இந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை

மேலும்
img
காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்

தொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img