வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மேகன் மெர்க்கல் போல மாற முயலும் பெண்!
சனி 23 ஜூன் 2018 16:48:02

img

இங்கிலாந்தின் பக்கிக்காம்ஷயர் கவுண்டியை சேர்ந்தவர், 30 வயதான டிரேசி கிஸ். இவருக்கு பிரெட்டி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மேகனின் தீவிர ரசிகையான டிரேசிக்கு, அவரைப் போல மாற ஆசை. குறிப்பாக, மேகனின் மூக்கும், சிரிப்பும் தனக்கு வர வேண்டும் என விரும்பிய டிரேசி, கணவரின் எதிர்ப்பையும் மீறி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இவர், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் மேகன் போலவே தனது சிரிப்பு இருக்க வேண்டும் என பற்களையும் மாற்றியிருக்கிறார். இதற்காக டிரேசி இதுவரை 9 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்.மேகன் போல மாற டிரேசி இவ்வளவு பணம் செலவழித்தது அவர் கணவர் பிரெட்டிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் இதுகுறித்து டிரேசியுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் கணவரின் எதிர்ப்பையும் மீறி டிரேசி இவ்விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார்.

அவர் கூறும்போது, மேகன்- ஹாரி திருமணத்தின்போது நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால் தொலைக்காட்சி மூலம் அவர்களின் திருமணத்தைப் பார்த்தேன். தற்போது எனக்கு மேகன் போலவே மூக்கும், சிரிப்பும் கொஞ்சம் வந்துள்ளதாக நம்புகிறேன், இதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

அடுத்தவரைப் போல மாறும் மோகம், அளவுக்கு மீறிச் சென்றிருக்கிறது! 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img