புதன் 21, நவம்பர் 2018  
img
img

காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால் தூக்கில் தொங்க தயார் -ஆந்திர துணை முதல்வர்
வியாழன் 07 ஜூன் 2018 15:28:07

img
அமராவதி
 
காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன் ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக கூறினார். 2019 ல் மையத்தில் பதவிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதை  காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.இதனால் சில சில தெலுங்கு தேசம் தலை வர்கள்  கூட்டணிக்கு விரும்பினர்.
 
கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூட சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள்  காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என  அவர் கேட்டுக் கொண்டார்.
 
ஆனால் இந்த நிலையில் ஆந்திராவை ஆளும்  தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) மற்றும் காங்கிரஸ் இடையே  கூட்டணி ஒரு சாத்தியமான நிலை உருவானால் அதற்கு எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்து, தான் தூக்கில் தொங்குவதாக ஆந்திர துணை முதல்வர்   கிருஷ்ண மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
 
கர்னூலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:- 
 
"காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி என்பது குறித்த  கேள்விக்கே இடமில்லை, ஆனால் அது நடந்தால்,  நானே  தூக்கில் தொங்க  தயாராக இருக்கிறேன். இது எனது தனிபட்ட கருத்து அல்ல நான் கட்சியின் சார்பாக பேசுகிறேன். எனினும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு கூட்டணியும் முடிவு செய்யப்படும். என கூறினார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img