img
img

இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ‘எச்-4 விசா’ - டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல்
சனி 26 மே 2018 13:44:54

img

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி, இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் ‘எச்-1’ பி விசா பெற்று வேலை செய்கிறார்கள். அவர்களது வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி, அங்கு பணி ஆற்றுகிற திட்டத்தை ஒபாமா, ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார். ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.  இதன் காரணமாக ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிற ஆண்களின் மனைவிகளுக்கும், பெண்களின் கணவர்களுக்கும் ‘எச்-4’ விசா வழங்கி பணி ஆற்றுகிற வாய்ப்பினை தட்டிப்பறிக்க முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கு, அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான முடிவு எடுக் கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று கோர்ட்டில் டிரம்ப் நிர்வாகம் (உள்நாட்டு பாதுகாப்பு துறை) ஒப்புக்கொண் டது. இறுதி முடிவு எடுத்த உடன், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஒபாமா கொண்டுவந்த இந்ததிட்டம் பறிக்கப்பட்டுவிட்டால், இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக அமெரிக்க நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், ‘எச்-4’ விசா பெற்று இருப்பவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img