img
img

மீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி: அரசியலுக்கு வர திட்டம்?
திங்கள் 21 மே 2018 12:55:45

img

பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் கிடக்கி றது. ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணா வின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார்.

தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. இதை எதிர்த்து அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம், மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.

இந்த நிலையில் சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரு கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் பேசுகிறார். ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர்.

அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி தலையில் முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினார். விரைவில் ஒரு கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட ஸ்ரீரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காந்தி தலையில் குண்டு - சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம்!!

தமிழகம் முழுவதும் கடந்த ஜீன் 14ந்தேதி வெள்ளிக்கிழமை

மேலும்
img
கூண்டோடு மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்த டெல்லி தலைமை!

முதல்வர் குமாரசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக

மேலும்
img
அதிமுகவின் முடிவால் பாமக கோபம்!

அதிமுகவில் சீனியர்கள் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுக

மேலும்
img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img