வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு
புதன் 16 மே 2018 16:04:08

img

சென்னை, 

அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்கு வதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செய லாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கி னார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.போயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img