திங்கள் 25, மார்ச் 2019  
img
img

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தூக்கிலிடுங்கள்! - உன்னாவ் சிறுமி வேண்டுகோள்
வெள்ளி 11 மே 2018 17:08:16

img

தன்னை பாலியல் வன்புணர்வு செய்த பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை தூக்கிலிட வேண்டும் என பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்க குற்றவாளி என சி.பி.ஐ. விசாரணையில் உறுதியாகியுள்ளது. 

சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்மீதான வழக்கை கிடப்பில் போட உள்ளூர் காவல்து றையினரைப் பயன்படுத்தியது, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இருந்து தப்பியது, சிறுமி தரப்பு ஆதாரங்களை மிரட்டியது மற்றும் மறைத்தது ஏராளமான என உண்மைகள் வெளிவந்தன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி, ‘என்னை பாலியல் வன்புணர்வு செய்ததற்காகவும், என் தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்த தற்காகவும் குற்றவாளியான குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது மகனை தூக்கிலிடவேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே, எங்களால் நீதிமன்றத்தில் பயமின்றி பதிலளிக்கமுடியும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img