img
img

பேஷன் ஷோவில் உள்ளாடையில் இந்து கடவுள் உருவம்; இந்து அமைப்புகள் எதிர்ப்பு
செவ்வாய் 08 மே 2018 15:47:24

img

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ரோஸ்மவுண்ட் ஆஸ்திரேலியாவின் பேஷன் வீக் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது. அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.

அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால், இதைக் கண்ட இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனால் இந்து அமைப்புகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆஸ்திரேலிய கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அந்த போராட்டத்தில் இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img