img
img

அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை ‘ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து’
வெள்ளி 04 மே 2018 19:02:47

img

நியூயார்க்,

 ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக் கொள்ளவும் அது வழிவகுத்து உள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12–ந் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.

அதற்கு ஏற்ற வகையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வந்து உள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பி.பி.சி. நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ராஜ்யரீதியிலான முக்கியமான வெற்றி ஆகும். அதை பராமரித்து வர வேண்டும். நல்லதொரு மாற்றை உருவாக்காமல், இந்த ஒப்பந்தத்தை அழித்து விடக்கூடாது’’ என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘(ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால்) அது ஆபத்தான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகி விடும்’’ என்று குறிப்பிட்டார்.

அதாவது, போர் மூளும் நிலை உருவாகக்கூடும் என்பதையே ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சூசகமாக எச்சரித்து உள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img