செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

பெண்களுக்கு அதிகாரமளிப்பு பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்கள்
வெள்ளி 04 மே 2018 18:47:49

img
பெங்களூரு,
 
மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான மோதல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடுக்கும் பதிலடியைவிட அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா காரசாரமாக டுவிட்டரில் பதிலடியை கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி நேரடி பிரசாரம் மட்டுமின்றி நரேந்திர மோடி செயலி வாயிலாகவும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கர்நாடக மாநில பா.ஜனதா மகளிர் அணியிடம் பேசினார் பிரதமர் மோடி.
 
 எனது அரசு மற்றும் பாரதீய ஜனதாவின் தாரக மந்திரமே பெண்களுக்கு முதலிடம் என்பது தான் என பேசினார். பெண்களுக்கு அதிகாரமளிப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு சித்தராமையா பதிலடியை கொடுத்து உள்ளார். 
 
மோடிஜி அவர்களே உண்மையான பெண்கள் அதிகாரமளிப்பு என்பது உண்மையான கொள்கைகளில் இருந்து வருகிறது. கத்துவாவில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்தை பரிகாசம் செய்தீர்கள், இன்றோ பெண்கள் சக்தியை பற்றி கவலைக்கொள்வது போன்று பாசாங்கு செய்கிறீர்கள். பெண்கள் முன்னேற்றத்திட்டத்தை கர்நாடக அரசு எப்படி முன்னெடுத்து உள்ளது என்பதை படியுங்கள் என்று அம்மாநில அரசின் திட்டங்களை பட்டியலிட்டு சித்தராமையா டுவிட்டரில் பதிலடியை கொடுத்து உள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் பிஜி வரையில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவசமான கல்வியை கொடுக்கிறோம். 
 
நேற்று நீங்கள் கேலி செய்த பெங்களுரூ நகரே வேலைவாய்ப்பில் 25% பெண்களின் பங்களிப்புடன் நாட்டில் முன்னிலை பெற்று உள்ளது. நீங்கள் இருக்கும் டெல்லி நகரம் 10 சதவிதம் கொண்டு உள்ளது. அதனை மேற்படுத்த நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?
 
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 10 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொடுத்து வருகிறோம். குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நாங்கள் சட்ட திருத்தம் கொண்டு வந்து உள்ளோம். நாங்கள் பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறோம், இதில் பாதி பெண் குழந்தைகள். 
 
பெண் தொழில் அதிபர்களுக்கு நாங்கள் 4 சதவிதம் வட்டியுடன் கடன் வழங்கி வருகிறோம். பெண்களுக்கு என்று நாங்கள் தொழில்துறை பார்க்கை உரு வாக்கி உள்ளோம், பெண்கள் தொழில் முனைவோருக்காக நாங்கள் சர்வதேச அளவில் சிறந்த மாநிலமாக விருது வாங்கி உள்ளோம். பெண்கள் சுயநிதி குழுக்களுக்கு நாங்கள் ரூ. 25000 சுழற்சி நிதி அளிக்கிறோம். பாலியல் தொழில் செய்பவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், திருநங்கைகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் திட்டங்களை செயல்படுத்துகிறோம் என பிரதமர் மோடிக்கு அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்தி பதில் கொடுத்து உள்ளார் சித்தாராமையா. 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img