செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

சீனா; பள்ளியில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் 9 மாணவர்கள் பலி
சனி 28 ஏப்ரல் 2018 17:16:24

img

பெய்ஜிங்,

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்ஷி மாகாணம். இங்குள்ள மிசி கவுண்டியில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவரும்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 9 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பள்ளி மாணவர் என்பது தெரிய வந்ததுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் பழிவாங்குதலுக்காக நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரான வன்முறையைத் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதும் அங்கு வன்முறை குற்றங்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img