செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
புதன் 25 ஏப்ரல் 2018 16:50:06

img

நைஜீரியா தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்குச்சூடு தாக்குதலில் 19 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் அதிபர் முகமது புகாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பழங்குடியின முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் இங்கு மோதல் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்துள்ளன. 

அந்நாட்டில் புலானி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள கிறிஸ்துவர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்தப் பிரச்னை, நிலங்களில் ஆடுகளை மேய விடுவது பற்றிய விவகாரத்தில் தொடங்கி இப்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. 

இந்நிலையில், நைஜீரியாவின் கிழக்கு க்வெர் பகுதியில் உள்ள செயின்ட் இக்னேசியஸ் என்ற தேவாலயத்தில் நேற்று அதிகாலை வழிபாடு நடத்து வதுக்காக அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக உள்ளே நுழைந்த புலானி இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் தேவாலயத்தில் இருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மத போதகர்கள் இருவர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீய ணை ப்புத் துறையினர் மிகவும் துரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர், புலானி இனத்தவர்கள், கிறிஸ்துவர்களின் 50 வீடுகளுக்குத் தீவைத்து எரித்துள்ளனர். மேலும், இந்த இருபிரிவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 72 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்

தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img