திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

விடுதலைப் புலிகளின் யுக்தியை பின்பற்றிய இந்திய இராணுவம்..!
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:42:35

img

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக பகைகமை காணப்படும் நிலையில் அண்மையில் இந்த பகைமை தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய இராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர். இந்த தாக்குதலில் 18 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாகவும் இது கருதப்படுகிறது. இதற்கு பதில் தாக்குதலாக இன்று அதிகாலை இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. இந்த தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் யுக்தியை இந்திய இராணுவம் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வான் மற்றும் தரை மார்ககமாக ஊடுருவி தமிழீழ விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, தாக்குதலை விடுதலைப்புலிகள் படமாக்குவதுபோல் படமாக்கியுள்ளதாக இந்திய இராணுவதினர் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் பாணியில் வீடியோவில் பதிவு செய்துள்ளதா இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த வீடியோ பதிவுகளை வெளியிடுவது குறித்து இந்திய மத்திய அரசு முடிவு செய்யும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலை முழுமையாக இராணுவம் படம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...

இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது

மேலும்
img
ராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு

மேலும்
img
தந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள் 

மகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன

மேலும்
img
இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான

மேலும்
img
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img