img
img

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:20:40

img

வாஷிங்டன் : உடல்நலக்குறைவுக் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் இவருக்கு ரத்தத்தில் பரவிய தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மேலும் தகவல்களை பின்னர் அறிவிப்ப தாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

ஆனால் முன்னாள் அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். கடந்த வாரம் ஜார்ஜ் புஷ்யின் மனைவி பார்பரா புஷ் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய நிலையில் புஷ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 41-வது அதிபராக ஜார்ஜ் எச்.புஷ் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img