செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது....
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:07:17

img

சென்னை:

ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அவர் என்ன கருணாநிதியா என்று தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 2011-ஆம் ஆண்டு திமுக என்ற மாபெரும் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு வைகோ ,திருமாவளவன் உள்ளிட்டோர் உள்ள மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் திமுகவோ 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், காவிரிக்கான அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன்.

ஆனால் திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே இருந்தது. அதுபோன்ற கூட்டங்களில் நானும் பங்கேற்று ஸ்டாலினின் துதி பாட வேண்டுமா?, அதற்கு ஸ்டாலின் என்ன கருணாநிதியா?

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என நாங்கள் விரும்பினோம், ஆனால் திமுகவோ 40 தொகுதிகள் தர தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்னைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்றார் விஜயகாந்த். 2016-இல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், டெபாசிட் கூட வாங்காத தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஸ்டாலினை கிண்டல் செய்வது திமுகவினரிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img