வியாழன் 20, ஜூன் 2019  
img
img

ஆளுநரிடம் மோதும் நிலையில் நாம் இல்லை!
வியாழன் 19 ஏப்ரல் 2018 16:00:41

img

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம், இன்று விசாரணையைத் தொடங்கிவிட்டார். ' பேரா சிரியை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார். ' ஆளுநர் நம்முடைய எதிரி அல்ல. நடப்பது நன்மைக்கே' என அமைச்சர்களிடம் பேசியி ருக்கிறார் முதல்வர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ காட்சிகள், தமிழக அரசியலில் அதிர்வ லையை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளுக்குப் பாலியல் வலை விரித்த வழக்கில், நான்கு பிரிவுகளின்கீழ் நிர்மலாதேவி மீது வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் இணைத்து செய்திகள் வெளியானதால், ராஜ்பவனில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தார் ஆளுநர். இந்நிலையில், நிர்மலாதேவியியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது. அவரிடம் இருந்த 3 செல்போன்களும் ஐந்து சிம் கார்டுகளும் பல விஷயங்களைத் தெரியப்படுத்தின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், ``பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மலாதேவிக்கு தனிச் செல்வாக்கு உண்டு. சில பேராசிரியர்களின் வழிகாட்டுதலில்தான் அவர் இயங்கிவந்தார். ஆடியோ விவகாரம் வெளியில் வந்ததும், அந்தப் பேராசிரியர்களில் சிலர் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட தனி யார் கல்லூரி மீது மட்டும் விசாரணை வளையம் திரும்பியிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சில தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். சந்தானம் கமிஷன் விசாரணையும் சி.பி.சி.ஐ.டி விசாரணையும் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடாது என்பதுதான் கல்வியாளர்களின் கவலையாக இருக்கிறது. காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பணிபுரியும் சிலரை வளைத்தால் அனைத்து உண்மைகளும் வெளியில் தெரியவரும்" என்றார் வேதனையோடு. 

எடப்பாடி பழனிசாமி`` மாணவிகளை பாலியல் விவகாரத்துக்கு அழைத்த சம்பவத்தோடு, விசாரணையை நிறைவு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கு முந்தைய காலகட்டங்களில் நிர்மலா மீது புகார் கொடுத்த மாணவிகளை, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள் மூடி மறைத்து ள்ளனர். 'எதிர்காலமே இல்லாமல் செய்துவிடுவோம்' எனவும் அச்சுறுத்தியுள்ளனர். அந்த மாணவிகளை வெளிப்படையாகப் பேசவைத்தால், உயர்க ல்வித்துறையின் மோசமான பக்கங்களை மக்கள்முன் வெளிக்காட்ட முடியும். இதனையொட்டித்தான் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர் சாராத பல்கலைக்கழக அமைப்புகளும் இணைந்து போராட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படும் வரையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்'' என்கின்றனர் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர். 

இந்நிலையில், ஆளுநர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அமைதியாக இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ' ஆளுநரை மாற்றும் வரையில் போராட்டம் தொடரும்' என அறிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரம் குறித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ' நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் நிச்சயம் சிக்குவார்கள். அவரது செல்போன் பேச்சு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டிதான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்' எனப் பதில் அளித்தார். ' எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கும் வார்த்தைகள் ஆளு நர் மாளிகை வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. ' துணைவேந்தர்கள் நியமனம், மாவட்டங்களில் ஆய்வு என அரசுக்கு நெருக்கடி கொடுத்த ஆளுநர், இவ்வளவு எளிதாக சர்ச்சையில் சிக்குவார்' என அமைச்சர்களே எதிர்பார்க்கவில்லை. 

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கொந்தளிப்பதைக் கவனித்த முதல்வர், அமைச்சர்களிடம் சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அவர் பேசும்போது, ' நடப்பது எல்லாம் நன்மைக்கே. ஆளுநர் நமக்கு எதிரியல்ல. என்னுடைய எதிரி யார் என்பது எனக்குத் தெரியும். தினகரனும் ராம தாஸூம்தான் நமக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். ஆளுநர் விவகாரத்தில் நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மத்திய அர சின் முடிவுக்கே விட்டுவிடுவோம். ஆளுநரிடம் மோதும் நிலையில் நாம் இல்லை. ' நாம்தான் அ.தி.மு.க' என்பதை நிறுவ வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் இருக்கும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். இதுதான் நம்முன் இருக்கும் பிரதான பிரச்னை' எனப் பேசியிருக்கிறார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img