img
img

ஜோதிகாவின் அடுத்த படத்தில் வித்தார்த்
புதன் 18 ஏப்ரல் 2018 13:59:31

img
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் மறுபதிப்பில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை படங்கள் பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக கொடிவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்த தாக ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் மறுப்பதிப்பில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் வித்தியா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் திருமணமான, நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். அவரின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். மொழி படத்திற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img